செய்திகள்

செய்யாறு கோர்ட்டில் நீதிபதிக்கு மிரட்டல்: 3 பேர் கைது

Published On 2016-12-07 10:18 GMT   |   Update On 2016-12-07 10:18 GMT
செய்யாறு கோர்ட்டில் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செய்யாறு:

திண்டிவனத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தொடர்பான வழக்கு செய்யாறு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று செந்தில்குமார் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இதற்காக கடந்த 5-ந் தேதி செந்தில்குமார் கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.

தனது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக மேல் கோர்ட்டில் அப்பீல்தான் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

ஆனால் அதை செந்தில் குமார் ஏற்க மறுத்து பேசினார். அவருடன் மேலும் 9 பேர் சேர்ந்து கொண்டு நீதி பதிக்கு எதிராக பேசினர். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக கோர்ட்டு எழுத்தர் தயாளன் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் செந்தில் குமார் உள்பட 10 பேர் கோர்ட்டின் மாண்பை கெடுத்து நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

அதன்பேரில் செந்தில் குமார் உள்ளட 10 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்தார்.

இவர்களில் செய்யாறு திருமூண்டியை சேர்ந்த ரகுபதி (வயது 46), சென்னை முகப் பேரை சேர்ந்த வெங்கடேசன் (48), திண்டிவனத்தை சேர்ந்த செய்னுதீன் (50) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News