செய்திகள்

துக்ளக் ஆசிரியர் சோ உடலுக்கு முதல்வர், அமைச்சர்கள் - சசிகலா அஞ்சலி

Published On 2016-12-07 10:10 GMT   |   Update On 2016-12-07 10:10 GMT
மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியின் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சசிகலா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:

நடிகர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட சோ ராமசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல், எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, எம்.சி. சம்பத் ஆகியோர் இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தமிழக முதலமைச்சரின் தோழி சசிகலா நேரில் வந்து சோ உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் அவருடன் வந்திருந்தனர். அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், பி.எச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி., வானதி சீனிவாசன், இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Similar News