செய்திகள்

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது ஜெயலலிதா உடல்

Published On 2016-12-06 01:16 GMT   |   Update On 2016-12-06 01:16 GMT
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்றிரவு (திங்கட்கிழமை) காலமானார். இதயம் செயலிழந்ததன் காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதாவுக்கு மூவர்ண கொடி மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையை நோக்கி மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவின் முகம் தொலைக்காட்சியில் நேரடியாக காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. மூவர்ண கொடி போர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, மறைந்த ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் போயஸ் கார்டனுக்கு நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அவருக்கு உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

Similar News