செய்திகள்

ஜெயலலிதா மறைவு செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. முக ஸ்டாலின்

Published On 2016-12-05 20:05 GMT   |   Update On 2016-12-05 20:05 GMT
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சென்னை,

இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.  ஜெயலலிதா மறைவையடுத்து தேசிய அளவில் உள்ள தலைவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தனது இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-  பெண் அரசியல்வாதியாக வியக்க வைக்க தலைவர் ஜெயலலிதா. அவரது போராட்ட குணங்களை கண்டு வியக்கிறேன். அதிமுக தொண்டர்களிடம் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News