செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்தது

Published On 2016-12-05 07:08 GMT   |   Update On 2016-12-05 07:08 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ஒரு சவரன் ரூ.21,880-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது.

இதற்கிடையே ரு.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. பவுன் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 576 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. 2-ந்தேதி ரூ.22 ஆயிரத்து 96-க்கு விற்றது.

இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 880 ஆக இருந்தது. கிராமுக்கு ரு.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,735-க்கு விற்கிறது.

பங்குசந்தையில் முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தை விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 55 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.90க்கு விற்கப்படுகிறது.

Similar News