செய்திகள்

விழுப்புரம் அருகே வி‌ஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Published On 2016-12-04 11:31 GMT   |   Update On 2016-12-04 11:31 GMT
விழுப்புரம் அருகே வி‌ஷம் குடித்து பெண் போலீஸ் தற்கொலை முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் காக்குப்பம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் புஷ்பா. இவரது மகள் ஜெயலலிதா (வயது 24). இவர் விழுப்புரம் காக்குப்பத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

ஜெயலலிதா பணி முடிந்து சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை. அப்படியே வீட்டுக்கு வந்தாலும் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பார்.

இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் மனமுடைந்த ஜெயலலிதா வீட்டில் இருந்த எறும்பு பொடியை (வி‌ஷம்) கரைத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வாந்தி- மயக்கம் எடுத்த அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக ஜெயலலிதாவை அவரது தாயார் புஷ்பா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் 108 ஆம்புலன்சு மூலம் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News