செய்திகள்

புன்செய் புகழூர் பேரூராட்சி பகுதிகளில் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம்

Published On 2016-12-03 12:35 GMT   |   Update On 2016-12-03 12:35 GMT
கரூர் மாவட்டம் புன்செய் புகழூர் பேரூராட்சி சார்பில் கக்கன் காலனி சமுதாயக் கூடம், புகழூர் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம் புன்செய் புகழூர் பேரூராட்சி சார்பில் கக்கன் காலனி சமுதாயக் கூடம், புகழூர் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில் பாரத பிரதமரின் ஜன்தன் யோஜனா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோரது வங்கி கணக்கு மற்றும் இதர சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்கவும்.

இதுவரை வங்கிக் கணக்கில் இல்லாதவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கிடவும் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி தவணை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர்கள் ரமேஷ், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் பெற்றுக் கொண்டனர். முகாமில் பேரூராட்சிப் பணியாளர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News