செய்திகள்

திண்டுக்கல் அருகே ஆரஞ்சு-காப்பி தோட்டங்களை நாசம் செய்த யானைகள்

Published On 2016-11-28 12:02 GMT   |   Update On 2016-11-28 12:02 GMT
திண்டுக்கல் அருகே யானைகள் ஆரஞ்சு மற்றும் காப்பி தோட்டங்களை மிதித்து சேதப்படுத்தின. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கவும்.

பெரும்பாறை:

திண்டுக்கல் அருகே தாண்டிக்குடி கீழ்மலைப் பகுதியில்  ஏராளமான தோட்டங்கள் உள்ளன. அங்கு காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, ஏலக்காய், அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

சாமிமலை மற்றும் குப்பமாள்பட்டி பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. காப்பி தோட்டங்களில் உள்ள முள்வேலி, சோலார் வேலி போன்றவைகளை உடைத்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் மற்றும் பல மரங்களை வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது.

மறுநாள் தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கன்னிவாடி, வத்தலக்குண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனவர்கள் விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News