செய்திகள்

டிசம்பர் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

Published On 2016-11-28 07:59 GMT   |   Update On 2016-11-28 07:59 GMT
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. 48 மணி நேரத்தில் இந்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையை நோக்கி நகரும் போது மழை பெய்யும்.

இதனால் டிசம்பர் 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News