செய்திகள்

தண்டவாளத்தில் நடந்த போது ரெயில் விபத்தில் தப்பிக்க கூவத்தில் குதித்தவர் பலி

Published On 2016-11-27 10:50 GMT   |   Update On 2016-11-27 10:50 GMT
தண்டவாளத்தில் நடந்த போது ரெயில் விபத்தில் தப்பிக்க கூவத்தில் குதித்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

நுங்கம்பாக்கம் அருகே நேற்று காலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக ரெயில் வந்தது. இதனை எதிர்பாராத வாலிபர் கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது மீது ரெயில் மோதி விடக்கூடாது என்பதால், உடனடியாக சுதாரித்த அந்த வாலிபர் பாலத்தில் இருந்து கீழே கூவத்தில் குதித்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று வாலிபரை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழே குதித்த வாலிபர் கூவத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது பெயர் பாலாஜி (37). அண்ணா நகர் அருகே உள்ள பெரிய ஏரிசாலை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. லாரி மெக்கானிக்கான இவர், வேலை வி‌ஷயமாக நுங்கம்பாக்கம் பகுதிக்கு சென்று விட்டு திரும்பிய போது தான் ரெயில் விபத்தில் இருந்து தப்பிக்க கூவத்தில் குதித்திருப்பதும் தெரிய வந்தது.

அவர் அணிந்திருந்த உடையில் ஆதார் அட்டை இருந்தது. அதனை வைத்து போலீசார் பாலாஜியை அடையாளம் கண்டனர்.

Similar News