செய்திகள்

பிடல் காஸ்ட்ரோ மறைவு: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல்

Published On 2016-11-26 09:25 GMT   |   Update On 2016-11-26 09:25 GMT
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புரட்சியாளர்கள் என்றும் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக 50 ஆண்டுகள் பிரதமராகவும், அதிபராகவும் பல்லாண்டு காலம் கியூபாவை ஆட்சி செய்து வழிநடத்தியவர்.

அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளித்து கியூபா நாட்டை மிகப்பெரிய வல்லரசு நாடாக உயர்த்திய மிகப்பெரிய தலைவராக திகழ்ந்தவரை இன்று இழந்துள்ளோம்.

விவசாயியின் மகனாக பிறந்து, சட்டம் பயின்று ராணுவத்திடம் இருந்து கியூபாவை மீட்க புரட்சியாளராக உருவெடுத்த பிடல் காஸ்ட்ரோவின் வழியில் அவரது மகன் தொடர்ந்து கியூபாவை ஆட்சி செய்து அந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் கியூபா நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு எனது வீரவணக்கத்தையும் கியூபா நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News