செய்திகள்

திண்டுக்கல் அருகே விலை வீழ்ச்சியால் தக்காளியை வேலியில் கொட்டும் விவசாயிகள்

Published On 2016-11-10 12:03 GMT   |   Update On 2016-11-10 12:03 GMT
தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாகவும், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் தக்காளியை வேலியில் கொட்டி ஆதங்கப்பட்டனர்.

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, சிந்தல வாடம்பட்டி, சாமியார் புதூர், வேலூர்- அன்னப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, தொப்பம்பட்டி ஒன்றியம் தேவத்தூர், கள்ளிமந்தையம், கொத்தையம், மஞ்சநாயக்கன் பட்டி, போடுவார் பட்டி, கப்பலப்பட்டி, 16-புதூர், ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி நடவு செய்து வருகின்றனர்.

தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம் காரணமாக விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் தக்காளி நுகர்வு குறைவு காரணமாகவும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாகவும், விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே விவசாயிகள் தக்காளியை வேலியில் கொட்டி ஆதங்கப்பட்டனர்.

Similar News