செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

Published On 2016-11-02 07:11 GMT   |   Update On 2016-11-02 07:11 GMT
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,192-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை ரூ.192 உயர்ந்து பவுன் ரூ23 ஆயிரத்தை தாண்டியது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்து அறிவித்தது. அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கம் சர்வதேச அளவில் எதிரொலித்தது. பங்கு சந்தையில் கடும் சரிவு உருவானது. தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

பவுன் ரூ.20 ஆயிரம் அளவில் இருந்த தங்கம் விலை 22 ஆயிரத்தை கடந்து விற்றது. சமீபகாலமாக விலை நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

தீபாவளி பண்டிகையான கடந்த 29-ந் தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 944 இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரமாக உயர்ந்தது.

இன்று பவுன் ரு. 192 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ23 ஆயிரத்து 192 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண் டும் ரூ.23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ. 24 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,899-க்கு விற்கிறது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ 1075 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ44 ஆயிரத்து 385 ஆகவும், ஒரு கிராம் ரூ. 47.50 ஆகவும் உள்ளது.

Similar News