செய்திகள்

செஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்: பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2016-10-24 12:10 GMT   |   Update On 2016-10-24 12:10 GMT
செஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செஞ்சி:

விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா சிறப்பு செயற்குழு கூட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எதிர்வரும் பருவ மழை காலத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை நீரை சேமிக்க வேண்டும்.

தூய்மை பாரத பணியின் அடிப்படையில் டெங்கு, மலேரியா வராமல் தடுக்க குப்பைகளை அகற்றி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

செஞ்சி பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.

செஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சுகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டியன், மோகன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News