செய்திகள்

நாமக்கல் கமலாலய குளம் அருகே பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2016-10-23 13:02 GMT   |   Update On 2016-10-23 13:02 GMT
நாமக்கல் கமலாலய குளம் அருகே பூங்கா அமைக்கும் பணியை கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் கமலாலய குளம் அருகே புதிதாக பூங்கா அமைக்கவும், குளத்தை தூர்வாரவும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தனது தொகுதி மேம்பாட்டில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

நகராட்சி கமி‌ஷனர் செந்தில் முருகன், துணைத்தலைவர் சேகர், முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, நகராட்சி என்ஜினீயர் கமலநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் கோபிநாத் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News