செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் நகரில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமிரா: போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தகவல்

Published On 2016-10-15 15:07 GMT   |   Update On 2016-10-15 15:07 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கரூர் நகரில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது என போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கூறினார்.

கரூர்:

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த செப் டம்பர் மாதம் மட்டும் குடி போதையில் வாகனம் ஓட் டியது, அதிக வேகமாக வாகனம் ஓட்டியது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என மொத்தம் 9,826 வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ. 22 லட்சத்து 80 ஆயிரத்து 180 அபராதம் விதிக்கப்பட்டது.

வீரராக்கியத்தில் காவ லாளியை கடத்திய வழ க்கில் 26 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

அதே போன்று பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடு பட்டவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பொரு ட்கள் மீட்கப்பட்டு உள்ளது. 7 கொலை வழக்கில், ஈடுபட்ட 20பேருக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கிடைத்துள்ளது.ஒரு சி ல கொலையில் ஈடுபட்டவர்களை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சிறிய க்ளூ கூட கிடைக்காமல் உள்ளது. இருப்பினும் 2 கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்.

அரவக்குறிச்சி பகுதியில் புதிதாக போக்குவரத்து பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கரூர் நகரில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது.

இவ்வாறு கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News