செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூரில் அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

Published On 2016-09-30 17:26 GMT   |   Update On 2016-09-30 17:26 GMT
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூரில் அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் அக்டோபர் 17 மற்றும் 19–ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விரைந்து நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றை கரூர் நகராட்சி சார்பில் அழிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் கருவியில் உள்ள டேங்கில் சுண்ணாம்பு நீர் மற்றும் சில வண்ண பவுடர்கள் கலந்து ஸ்பிரேயர் மூலம் சுவரில் எழுதப்பட்டு இருந்த விளம்பரங்களை அழித்து வருகின்றன.

அதேபோன்று கரூர் பஸ் நிலைய ரவுண்டானா, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சி விளம்பர பதாகைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

Similar News