செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: 5-வது நாளான இன்று மட்டும் 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல்

Published On 2016-09-30 15:14 GMT   |   Update On 2016-09-30 15:14 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5-நாளான இன்று மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக் கான நேரடி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில் 6 ஆயிரத்து 433 பேரும், 3-ம் நாளில் 31 ஆயிரத்து 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5-நாளான இன்று மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இன்றைய வேட்பு மனுத் தாக்கல் விவரம்:

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 666 பேர்

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்: 7,128 பேர்

மாநகராட்சி உறுப்பினர்: 1,433 பேர்

நகராட்சி உறுப்பினர்: 3,982 பேர்

ஊராட்சி மன்ற தலைவர்: 31,114 பேர்

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் : 1,12,794பேர்

கடந்த 5 நாட்களில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 20 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News