செய்திகள்

பாபநாசம் அருகே லாரி டிரைவர் மாரடைப்பால் சாவு

Published On 2016-09-29 10:06 GMT   |   Update On 2016-09-29 10:06 GMT
பாபநாசம் அருகே லாரி டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பாபநாசம்:

கரூரில் இருந்து கும்பகோணம் நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இதில் லாரி டிரைவர்களான கரூர் தோகமலை வேதாச்சலபுரம் ஊரைச்சேர்ந்த ரமேஷ் (வயது 30), கரூர் தெற்கு தொட்டியப்பட்டி வெங்கடாசலம் (43), ஆகிய இருவரும் வந்தனர். பாபநாசம் அருகே ராஜகிரி மெயின்ரோட்டில் லாரி வரும்போது லாரி டிரைவர் ரமேசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே மற்றொரு லாரி டிரைவர் வெங்கடாசலம் லாரியை ஓட்டிக்கொண்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ரமேசை பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து லாரி டிரைவர் வெங்கடாசலம் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் இறந்த ரமேசின் உடல் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Similar News