செய்திகள்

சேலத்தில் கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி

Published On 2016-09-28 12:24 GMT   |   Update On 2016-09-28 12:24 GMT
சேலத்தில் கறிக்கோழி விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்:

சேலத்தில் கறிக்கோழி விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருளாக கறிக்கோழி உள்ளது.

இதனால் திருமண விழா, புதுமனை புகுவிழா, காதணி விழா, பிறந்த நாள் விழாக்கள் என அனைத்து விருந்துகளிலும் கறிக்கோழி இறைச்சி இன்று முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும் கறிக்கோழி இறைச்சி விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

இதனால் கடந்த மாதம் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 110-க்கும், கறிக்கோழி இறைச்சி ஒரு கிலோ ரு.140-க்கும் விற்கப்பட்டது .

இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தின் முழுவதும் ஏராளமானோர் விரதம் கடை பிடித்து வருகிறார்கள். இதனால் பலர் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை.

இதன் எதிரொலியாக கறிக்கோழி இறைச்சி விலையில் கடந்த சில நாட்களாக சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி 75 ருபாய்க்கும், உரித்த கோழி 110-க்கும், மொத்த விலைக்கு உயிருடன் ஒரு கிலோ 62 ருபாய்க்கும் விற்கப்படுகிறது. இதனால் கிலோவுக்கு 30 ருபாய்க்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதம் கறிக்கோழி விற்பனை 30 சதவீதமாக சரிந்துள்ளதாக கறிக்கோழி வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News