செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள்: முதல் கட்ட அறிவிப்பு வெளியீடு

Published On 2016-09-28 10:19 GMT   |   Update On 2016-09-28 10:19 GMT
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் குறித்த முதல் கட்ட அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆ‌கிய தேதியில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படு‌கிறது.  வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் கடந்த திங்கட்கிழமை(செப்.26) தொட‌ங்‌கியது.

அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியான மறு நாளே(திங்கட்கிழமை) அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து திமுக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது.

அந்த வகையில்,  உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்கள் குறித்த முதல் கட்ட அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளது.

திருச்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கான ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:-

மதிமுக: 6, 13, 19, 27, 38, 39, 41, 52 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி: 8, 15, 22, 23, 28, 29, 30, 35 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கீடு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 12, 55, 57, 58, 63 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கீடு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:  7, 14, 25, 37, 49, 50, 53, 60, 65 ஆகிய 9 வார்டுகள் ஒதுக்கீடு.

Similar News