செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2016-09-26 12:00 GMT   |   Update On 2016-09-26 12:00 GMT
கொட்டாம்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலூர்:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியை சேர்ந்தவர் கார் டிரைவர் செல்வம் (வயது30). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (20) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது தமிழரசி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் மனம் உடைந்த தமிழரசி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர்.

தமிழரசி தீக்குளித்ததை கேள்விப்பட்ட செல்வமும் பதறியடித்தபடி ஓடி வந்து மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

தீக்காயம் அடைந்த இருவரையும் மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தமிழரசி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக் டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Similar News