செய்திகள்

விவேகானந்தர்-வள்ளுவர் பாறைகளுக்கு இடையே பாலம்: குமரி அனந்தன் பாராட்டு

Published On 2016-09-09 02:16 GMT   |   Update On 2016-09-09 02:17 GMT
விவேகானந்தர்-வள்ளுவர் பாறைகளுக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் பாறையை பார்ப்பது வழக்கம். இப்பாறைக்கருகே சிறிது தூரம் கடல். அடுத்து வரும் பாறையில் 133 அடி உயர வள்ளுவர் சிலை பொலிவோடு நிற்கிறது.

விவேகானந்தர் பாறைக்கும் வள்ளுவர் பாறைக்கும் இடையில் இருக்கும் கடல் கொந்தளித்துப் பாறையிலே மோதிக் கொண்டேயிருக்கும். சிறிது தூரமேயுள்ள அக்கடல் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்றும் ஒரே நேரப் படகுப் பயணத்தில் இரு இடங்களையும் பார்த்துவிட்டுக் கரை திரும்ப வசதியாக இருக்கும் என்றும் பல்லாண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கும் வேண்டுகோளாகும். அந்த வேண்டுகோள் நிறைவேறப்போகும் வகையில் இருபாறைகளையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News