செய்திகள்

குமாரபாளையம் கோவிலுக்கு பிச்சைக்காரர் உருவில் சீரடி சாய்பாபா வந்ததாக பரபரப்பு

Published On 2016-08-28 13:38 GMT   |   Update On 2016-08-28 13:38 GMT
குமாரபாளையம் கோவிலுக்கு பிச்சைக்காரர் உருவில் சீரடி சாய்பாபா வந்ததாக பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் கோணப்புள்ளா மேடு பகுதியில் சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு பிரார்த்தனை நடக்கிறது.

இந்த கோவிலுக்கு அழுக்குப் படிந்த உடைகளை அணிந்துகொண்டு தாடி மீசை வளர்ந்த நிலையில் நேற்று பிச்சைக்காரர் ஒருவர் திடீரென வந்தார். அவர் கோவிலின் ஒரு பகுதியில் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வந்தவர்களை பார்த்து கைகளை நீட்டி ஆசி வழங்கினார்.

இதைப்பார்த்த பக்தர்கள் அவர் பாபாவின் உருவத்தில் வந்து இருப்பதால் இவரே பாபாவின் மறு உருவம் என கருதி ஆண்கள், பெண்கள் அனைவரும் பிச்சைக்காரருக்கு மாலை அணிவித்து தலையில் பூக்களைப்போட்டு சாஸ்டங்கமாக காலில் விழுந்து வணங்கினார்கள்.

இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அந்த முதியவரை வணங்கி ஆசி பெற்றனர். அவர்களில் ஒருசிலரிடம் மட்டும் முதியவர் பேசினார். மற்றவர்களிடம் எதுவும் பேசவில்லை. ஒருசில பக்தர்கள் அவர் அருகில் அமர்ந்து அன்பாக பேசி சாப்பாடு ஊட்டினார்கள். சிலர் வீட்டில் இருந்து உணவு வககைள், பழங்கள் போன்றவற்றை எடுத்து வந்து அவருக்கு கொடுத் தனர்.

இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News