செய்திகள்

நடுநிலையோடு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

Published On 2016-05-03 09:31 GMT   |   Update On 2016-05-03 09:34 GMT
பா.ம.க. வெற்றி பெற்றால் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோளிங்கரில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சோளிங்கர்:

வேலூர் மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையத்தில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சோளிங்கர் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதி ஆகும்.

இந்த பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு ஒரே தனியார் தொழிற்சாலை மட்டுமே உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிபடுகின்றனர்.

பா.ம.க. வெற்றி பெற்றால் வேலை வாய்ப்பை பெருக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர்.

இந்த தேர்தலில் பா.ம.க.விற்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது. தமிழக மக்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றுவதே என் நோக்கம்.

எல்லோரும் பணத்தை நம்பி உள்ளனர்.

நாம் நமது உழைப்பை நம்பி உள்ளோம். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News