உள்ளூர் செய்திகள்

கைதான வாலிபரை படத்தில் காணலாம்.


சங்கரன்கோவிலில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது

Published On 2022-07-24 08:56 GMT   |   Update On 2022-07-24 08:56 GMT
  • பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
  • வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பகுதியில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி. சுப்பையா உத்தரவின் பெயரில் டவுன் இன்ஸ்பெக்டர் பால் ஏசுதாசன் மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (30) என்பவர் வீட்டில் அனுமதியின்றி புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நாகராஜன் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் அனுமதி இல்லாமல் 200 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரியவந்தது. பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை மடக்கி பிடித்த போலீசாரை டி.எஸ்.பி. சுப்பையா மற்றும் இன்ஸ்பெக்டர் பால் ஏசுதாசன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News