உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட ராஜவசந்த், சங்கர்.

உத்தமபாளையத்தில் லாட்ஜூக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-09-13 06:59 GMT   |   Update On 2022-09-13 06:59 GMT
  • உத்தமபாளையத்தில் லாட்ஜூக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • சி.சி.டி.வி. கேமரா அடிப்படையில் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த போது இருவரையும் சுற்றி வளைத்தனர்.

உத்தமபாளையம்:

திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த பிச்சை முத்து மகன் சிவப்பாண்டி (வயது 34). இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உத்தம பாளையம் புறவழிச்சாலை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தார்.

இதே லாட்ஜில் கேரளாவைச் சேர்ந்த வேறு சில ஊழியர்களும் தங்கி இருந்தனர். அப்போது சிவ பாண்டி அறையின் கதவை தட்டுவது போல் சத்தம் கேட்கவே அவர் எழுந்து கதவைத் திறந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த 2 வாலிபர்கள் அவர்களை சரமாரியக தாக்கி பணம் ரூ.10,000 மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். இதனை தடுக்க முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபு அலி (27) என்பவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

இது குறித்து உத்தம பாளையம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டது. இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் மற்றும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். சி.சி.டி.வி. கேமரா அடிப்படையில் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த போது இருவரையும் சுற்றி வளைத்தனர்.

போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது கோவை மாவட்டம் நீலிக்கோணம்பாளையம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜவசந்த், நெல்லை மாவட்டம் பணகுடி புளிமர ஸ்டாப் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் சங்கர் (24) ஆகியோர்தான் இதில் ஈடுபட்டது என தெரிய வந்தது. இதனைத் தொ டர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News