தொடர்புக்கு: 8754422764

தமிழகத்திற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

பதிவு: மார்ச் 28, 2020 14:00

லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி

லண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவருக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பதிவு: மார்ச் 28, 2020 13:51

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் - தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி உத்திரவிட்டுள்ளார்.

பதிவு: மார்ச் 28, 2020 13:46

பொழிச்சலூரில் 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு

பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: மார்ச் 28, 2020 13:41

தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 8,795 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 28, 2020 13:16

சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

இந்தோனேசியா மதபோதகர்களுடன் தொடர்பில் இருந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 - ஆக உயர்ந்தது.

பதிவு: மார்ச் 28, 2020 12:43

தஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

பதிவு: மார்ச் 28, 2020 12:33

கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 28, 2020 12:26

கன்னியாகுமரி கொரோனா வார்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதிவு: மார்ச் 28, 2020 12:08

ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களில் 7,163 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 7163 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்.

பதிவு: மார்ச் 28, 2020 11:54

கோவை இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் உள்பட 19 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதி

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இதுவரை பெண் டாக்டர் உள்பட19 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 28, 2020 11:53

2 வாரங்களாக நானே தனிமையில் இருக்கிறேன்- கமல்ஹாசன்

கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 28, 2020 11:38
பதிவு: மார்ச் 28, 2020 11:35

அரசு தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு விதித்த தடையை மீறி காய்கறி விற்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

அப்டேட்: மார்ச் 28, 2020 11:40
பதிவு: மார்ச் 28, 2020 11:14

தொலைபேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொலைபேசி வழியாக வழக்குகளை விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: மார்ச் 28, 2020 11:00

ஊரடங்கை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார்

மார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.

பதிவு: மார்ச் 28, 2020 10:58

கமல் ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

பதிவு: மார்ச் 28, 2020 10:54

மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம்- மின்சார வாரியம் தகவல்

ஊரடங்கு காரணமாக மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 28, 2020 10:50

கச்சா எண்ணெய் சேமிப்பு குடோனில் திடீர் தீ விபத்து- 8 மணிநேரம் போராடி அணைத்தனர்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சேமிப்பு குடோனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் 8 மணிநேரம் போராடி அணைத்தனர்.

பதிவு: மார்ச் 28, 2020 10:44

புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்

புழல் சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் நேரடி பார்வையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ மூலம் பேச வைக்கப்பட்டனர்.

பதிவு: மார்ச் 28, 2020 10:44

கொரோனாவை தடுக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார் செந்தில் பாலாஜி

கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

பதிவு: மார்ச் 28, 2020 10:17

வங்கிக்கடன் வசூலை 6 மாதம் ஒத்திவைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

பூ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், வங்கி கடன்களுக்கான மாதத்தவணை வசூலை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

பதிவு: மார்ச் 28, 2020 09:52

More