செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

குமரி மாவட்டத்தில் 24 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு

Published On 2021-04-06 10:20 GMT   |   Update On 2021-04-06 10:20 GMT
வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதையடுத்து வாக்காளர்கள் பலர் திரும்பிச் சென்றனர். இதனால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

இரணியல்:

தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்றம் மற்றும் 6 சட்டமன்ற தொகுதி களுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்து கொள்ள வாக்கு சாவடிகளில் விவிபேட் கருவி வைக்கப்பட்டிருந்தது.

இதில் 7 வினாடிகள் தங்கள் வாக்களித்ததை வாக்காளர்கள் திரையில் காணலாம். இந்த நிலையில் குளச்சல் சட்டசபை தொகுதிகான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் குளச்சல் தொகுதி வாக்குச்சாவடி எண்.201, ஆலன்விளை அரசு நடுநிலைப்பள்ளி, வாக்குச்சாவடி எண். 203 கொடுப்பைகுழி அரசு நடுநிலைப்பள்ளி, வாக்குச்சாவடி எண்.257 இரணியல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வாக்குச்சாவடி எண்.265, 268 பேயன்குழி அரசு நடுநிலைப் பள்ளி, வாக்குச்சாவடி எண். 278 வில்லுக்குறி அரசு நடு நிலைப்பள்ளி ஆகிய வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதையடுத்து வாக்காளர்கள் பலர் திரும்பிச் சென்றனர்.

இதனால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குசாவடி பொறியாளர்கள் பழுதான எந்திரங்களை சரி செய்தனர். இதையடுத்து மீண்டும் அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதுபோல் ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான 61-வது வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட் டிருந்த மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. இதையடுத்து வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு அதிகாரிகள் வைத்தனர். ஆனால் அந்த எந்திரமும் பழுதடைந்தது. இதையடுத்து அந்த எந்திரம் சரி செயயப்பட்டது. பின்னர் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுதானது. மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் மின்னணு எந்திரங்கள் பழுதடைந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை சரி செய்தனர். பின்னர் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர்.

Tags:    

Similar News