லைஃப்ஸ்டைல்

உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

Published On 2018-04-12 06:20 GMT   |   Update On 2018-04-12 06:20 GMT
உங்களது மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் விரிவாக பார்க்கலாம்.
மாமியார் மருமகள் உறவு சண்டை சச்சரவு இல்லாமல் அமைந்துவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இந்த டிவி சீரியல்களில் வருவதை போல பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை தலைவிரித்து ஆட தான் செய்கிறது. திருமணம் ஆவதற்கு முன்னரே மாமியார் மருமகள் உறவு என்றால் சண்டையாக தான் இருக்கும் என பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுவே பெரும்பாலும் சண்டைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இங்கு உங்களது மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து விட்டு மாமியாருடன் சண்டை போட தயார் ஆகாமல் அவரது மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1. உங்களது அனைத்து ஆசைகளுக்கும் தடை விதிப்பதை உங்களால் உணர முடியும். அவரது தடைகள் ஒருவேளை கலாச்சரம், ஒரு சில சூழ்நிலைகள் அல்லது குடும்ப மரியாதை சார்ந்து இருந்தால் அவர் செய்வது சரி தான். நீங்கள் அதிகமாக யோசித்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.



2. உங்கள் மாமியார் உங்களது கனவுகள், தோற்றம் போன்றவற்றை பற்றி எப்போதும் தாழ்த்தி குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

3. உங்களின் தேவைகள் அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது போன்றவை உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.

4. உங்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லாமல் இருப்பது, முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு அழைத்து செல்லாமல் இருப்பது ஆகியவை பிடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்.
Tags:    

Similar News