லைஃப்ஸ்டைல்

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

Published On 2018-03-29 04:07 GMT   |   Update On 2018-03-29 04:07 GMT
அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
* இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

* இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். மிதவேகம் மிக நன்று என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிருங்கள்.

* வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடதுபுறத்திலேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறுக்குச்சாலை அல்லது பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச்செல்ல வேண்டும்.

* வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத சமயங் களில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள்.

* செல்போன் பேசிக்கொண்டே சாலைகள், ரெயில்வே தண்டவாளத்தை கடப்பது ஆபத்தானது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடைப்பிடிப்பதில்லை. வேகமாக ஓட்டுவதால் அவர்களுக்கும், அதைவிட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.



* சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அனைவரும் உணர வேண்டும். இதுவே விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

* இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக் கொண்டே போகாதீர்கள். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

* வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக்கொள்வதை தவிர்க்கலாம்.

* போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.

* சீக்கிரமாக குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்வது விபத்து நடக்க காரணமாகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.

* 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்ப்போம். உயிர்களை காப்போம்..!
Tags:    

Similar News