லைஃப்ஸ்டைல்

சகோதர அன்பை வெளிக்காட்டும் ரக்‌ஷா பந்தன்

Published On 2017-08-07 04:03 GMT   |   Update On 2017-08-07 04:03 GMT
ரக்‌ஷாபந்தன் விழா என்பது பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
ரக்‌ஷா பந்தன் விழா என்பது பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

ராக்கி கயிறு கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப்பண்டிகை என்பதை விட சமுதாயப்பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த பண்டிகை தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ண மயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரவுபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக்கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார்.

இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரவுபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கவுரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரவுபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார்.

திரவுபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்‌ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
Tags:    

Similar News