லைஃப்ஸ்டைல்
மெனிக்யூர்

மெனிக்யூர் கைகளுக்கு அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும்

Published On 2019-10-10 03:02 GMT   |   Update On 2019-10-10 03:02 GMT
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மெனிக்யூரில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.
மெனிக்யூர் என்பது கை, விரல், நகம் ஒப்பனைக் கலை ஆகும். முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் மட்டுமே. அதே போல் நமக்கு வயதாகி கொண்டிருக்கின்றது என்பதையும் முகத்திற்கு அடுத்தபடியாக கைகள் எளிதாய் நமக்கு காட்டிக்கொடுக்கும். காரணம், முதுமைக்குள் செல்ல செல்ல தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் தெரியத் தொடங்கும். பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்தபடியாக அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது கைகளைத்தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டெனத் தெரிவது கைகளும், விரல்களும் மற்றும் விரல் நகங்களுமே!

மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது என சொல்ல முடியும். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாக கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக கவர்ச்சியாக வெளிப்படுகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மெனிக்யூரில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது. மெனிக்யூர் செய்யும்போது உள்ளங் கைகளுக்கும், விரல்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால் அப்பகுதியில் உள்ள முக்கியமான நரம்புகளின் இணைப்புகள் தூண்டப்படுகின்றன.

உடலில் பல பாகங்களோடு தொடர்பில் உள்ள நரம்புகள் உடனடியாகத் தூண்டப்பட்டு மொத்த உடலுமே புத்துணர்ச்சி பெறுகிறது. உடலுக்கு உடனடி வலி நிவாரணம் கிடைக்கின்றது. நமது மூளை, இதயம், கண்கள், கழுத்து, முதுகுப் பகுதி எல்லாமே புத்துணர்வு அடையும். மேலும் இதில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் அதிக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News