search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைகள்"

    • வண்ண ஒளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.
    • பக்தர்கள் கைகளை உயர்த்தி மரியே வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறித்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம்.பெருமை மிக்க பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரப்பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்ற ப்பட்டது.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    நேற்று மாலை 6 மணி அளவில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தலைமையில் மரியா - அருளின் ஊற்று என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ் ,அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் அருட்தந்தையர்கள்பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்த உடன் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ணமின்னலங்கார பெரிய தேரில் பூண்டி மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு தேரை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பேண்டு வாத்திய இசை முழங்க நடைபெற்ற தேர் பவனியின் போது திரண்டு இருந்த பக்தர்கள் ,கைகளை உயர்த்தி மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினார்கள்.

    தேர்பவனிதொடங்கிய உடன் அதிரடி வாணவே டிக்கை நடைபெற்றது.வண்ண ஓளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.

    திருவிழா நிறைவு நாளான இன்று (திங்கள்)காலை திருவிழா திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றினார். இன்று (திங்கள் )மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி பேராலய ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    தேர் பவனியை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் நாடெங்கும் இருந்து வந்த பக்தர்கள் குழுமி இருந்தனர்.

    பேராலயம் அதி நவீன மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டு ப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    ×