லைஃப்ஸ்டைல்

நகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்

Published On 2018-02-03 05:17 GMT   |   Update On 2018-02-03 05:17 GMT
பெண்கள் நகங்கள் உடைவதை தடுக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நகங்கள் உடையக்கூடிய தன்மை பெறுவது, தைராய்டு பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளைக் குறிக்கும் அடையாளமாகவும் இருக்கலாம்.

நகம் உடைவதற்கான பொதுவான காரணங்கள் (Brittle nails often occur due to):

* நீண்ட காலமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, துணிகளைத் துவைக்கும்போது கடினமான டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு.

* நகங்களை நீளமாக்கவும் சுருக்கவும் அடிக்கடி நகங்களை நனைத்து ஊறவைப்பது. இதனால் நகங்கள் உடையும் தன்மையை அடைந்து, மென்மையாக மாறிவிடும், அளவுக்கு அதிகமான ஈரப்பதத்தால் எளிதில் உரிந்து வந்துவிடும்படி மாறிவிடவும் வாய்ப்புள்ளது.

* நெயில் பாலிஷ் ரிமூவர் (அசிட்டோன்), சுத்தப்படுத்தும் திரவங்கள் போன்றவற்றால் வேதிப்பொருள்கள் நகத்தை பாதிப்பது.

* அரிதாக இரும்புச்சத்துப் பற்றாக்குறை, உடலில் உள்ள ஏதேனும் நோய் அல்லது பூஞ்சை நோய்த்தொற்று போன்றவை.

* தைராய்டு பிரச்சனை, குறை பிட்யூட்டரி செயல்பாடு, நீரிழிவுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலாசியா போன்ற நாளமிலா சுரப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகள்.



உடையும் தன்மை கொண்ட நகங்களைச் சமாளித்தல்

* பாத்திரங்கள் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்யும்போது, இரப்பரால் ஆன கையுறைகளை அணிந்துகொள்ளவும்.

* கைகளை அடிக்கடி ஈரமாக்குவதைத் தவிர்க்கவும், சோப்பு அல்லது டிடர்ஜென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது குறைந்த அளவே பயன்படுத்தவும். இதனால் அவற்றால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கலாம்.

* பாத்திரம் கழுவியபிறகு, கைகளை நன்கு உலர்த்தி, லோஷன் அல்லது மென்மையான கிரீமை நகங்கள் மற்றும் விரல் முனைகளில் தேய்த்துக்கொள்ளவும்.

* நெயில் பாலிஷை முறையாக, சரியான விதத்தில் பயன்படுத்தினால் அது நகங்களின் பரப்பைப் பாதுகாக்கும்.

* அக்ரிலிக் பெயின்ட், ஒட்டக்கூடிய நகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு உடையக்கூடிய நகங்கள் இருந்தால் கண்டிப்பாக இவற்றைத் தவிர்க்கவும்.

* நகங்களை கரடுமுரடாகக் கையாள வேண்டாம். நகங்களின் முனைகளின் வடிவத்தை சீராக்க, உலோகமல்லாத உபகரணத்தைப் பயன்படுத்தவும், வட்ட வடிவில் மெதுவாகப் பயன்படுத்தவும்.

Tags:    

Similar News