லைஃப்ஸ்டைல்

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்

Published On 2017-11-18 09:15 GMT   |   Update On 2017-11-18 09:15 GMT
மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.
வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம். கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.



பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
Tags:    

Similar News