லைஃப்ஸ்டைல்

நகத்தை வலிமையாக்கும் இயற்கை வழிகள்

Published On 2017-06-21 06:07 GMT   |   Update On 2017-06-21 06:08 GMT
பெண்கள் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. இப்போது நகத்தின் வலிமையை பாதுகாக்கும் வழியை பார்க்கலாம்.
பெண்கள் விரல் நகங்களை நெயில் பாலீஷ் போட்டு அழகுபடுத்த ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் நகங்களை அலங்கரிப்பதற்கு காட்டும் அக்கறையை அதன் ஆரோக்கியத்தில் காண்பிப்பதில்லை. சிலருக்கு நகங்கள் பலகீனமாக இருக்கும். அதன் வளர்ச்சி சீராக இருக்காது. எளிதில் உடைந்துபோய் விடும்.

பெண்கள் விரல் நகங்களை பராமரிப்பதிலும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து விரல் நகங்களில் மசாஜ் செய்து வர வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விரல் நகங்களில் நன்கு மசாஜ் செய்து விட்டு காலையில் கழுவினால் நகங்கள் வலுவடையும். அதோடு பளப்பளப்பாக காட்சிதரும்.



உப்பை கொண்டும் நகங்களை பராமரிக்கலாம். உப்புடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடான நீரில் கலக்க வேண்டும். அதில் நகங்களை 10 நிமிடங்கள் முக்கி வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் நல்ல பலனை கொடுக்கும். பாதாம் எண்ணெய்யை நகங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவை கொண்டு கழுவி வந்தாலும் நகங்கள் பளபளப்படையும்.

நகங்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தால் இரவில் படுக்க செல்லும் முன்பாக எலுமிச்சை சாறை நகங்களில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் தேய்த்து கழுவ வேண்டும். தினமும் தண்ணீர் அதிகம் பருகுவதும் நகங்களுக்கு வலிமை சேர்க்கும்.
Tags:    

Similar News