லைஃப்ஸ்டைல்

சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா

Published On 2016-11-16 04:35 GMT   |   Update On 2016-11-16 04:35 GMT
புதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம்.
புதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம்.

இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

புதினா சாறு
எலுமிச்சை சாறு
தயிர்

இது இயற்கை முறையில் சருமத்தி சுத்தம் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது. புதினா சாறு, தயிர் தலா 1 ஸ்பூன் எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். இதை தினமும் உபயோகப்படுத்தலாம்.

முகப்பரு இருக்குமிடத்தில் செயல் புரிந்து கிருமிகளை அழிக்கிறது. முகப்பரு மீது தடவுங்கள். ஆனால் முகப்பரு உடைந்திருந்தால் அதன் மீது தடவ வேண்டாம். ஏனென்றால் இது பாதிப்பை அதிகப்படுத்தும்.

நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் அதனுடன் புதினா சாறு 2 ஸ்பூன் கலந்து ஸ்கரப்பாக முகத்தில் தேய்த்தால் அழுக்கு, இறந்த செல்கள் வெளியேறி சருமம் ஜொலிக்கும்.

ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதனுடன் புதினா எண்ணெய் சில துளி கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் வறண்ட கூந்தல் பொலிவு பெறும்.

Similar News