லைஃப்ஸ்டைல் (Health)

குழந்தைகளுக்கு விருப்பமான ரவா பூரி பாயாசம்

Published On 2018-02-08 09:31 GMT   |   Update On 2018-02-08 09:31 GMT
குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ரவையை வைத்து பூரி செய்து அதில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - 1௦௦ கிராம்
மைதா - இரண்டு டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு லிட்டர் (அரை லிட்டராக குறைக்கவும்)
சர்க்கரை - 15௦ கிராம்
முந்திரி - பத்து
திராட்சை - பத்து
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை



செய்முறை :

பாலை அடுப்பில் வைத்து அரை லிட்டராக சுண்டும் வரை காய்ச்சவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, மைதா, ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பிசறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, பூரி மாவு போல் பிசைந்து மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

பிறகு இந்த மாவை பூரி போல் திரட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், திரட்டி வைத்த பூரியை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுண்டிய பாலில் சர்க்கரை சேர்த்து ஒரு ஒரு கொதி வந்த பின் இறக்கி, பூரியை நொறுக்கி அதில் போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான ரவா பூரி பாயாசம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News