லைஃப்ஸ்டைல்

வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி

Published On 2018-02-07 09:29 GMT   |   Update On 2018-02-07 09:29 GMT
மாலையில் சூடான டீ, காபியுடன் சாப்பிட வேர்க்கடலை பக்கோடா சூப்பராக இருக்கும். இன்று இந்த பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம்,
கடலை மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,  
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை :

வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.

சூப்பரான வேர்க்கடலை பக்கோடா ரெடி.

குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News