லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்தமான பன்னீர் ஃப்ராங்கி

Published On 2018-01-26 07:17 GMT   |   Update On 2018-01-26 07:17 GMT
குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட இந்த பன்னீர் ஃப்ராங்கி செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

சப்பாத்தி - 5, 
பன்னீர் துருவல் - கால் கப், 
கேரட் துருவல் - சிறிதளவு, 
நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு, 
வெங்காயம் - ஒன்று, 
தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன், 
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும். 

தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும். 

சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News