லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் பொட்டுக்கடலை வடை

Published On 2018-01-25 09:41 GMT   |   Update On 2018-01-25 09:41 GMT
உளுந்து வடை, பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று விரைவில் எளியமுறையில் செய்யக்கூடிய பொட்டுக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை - 1 கப்
பச்சரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பெருங்காய தூள் - சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை : 

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்ட பொடித்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பொடித்த பொட்டுக்கடலை மாவு போட்டு அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, பெருங்காய தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவு தளர்ந்து விட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவு சேர்த்து கொள்ளலாம்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டிப்போட்டு பொரித்து எடுக்கவும்.

சூடான பொட்டுக்கடலை வடை ரெடி.

சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News