லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் லாலிபாப்

Published On 2018-01-19 09:10 GMT   |   Update On 2018-01-19 09:10 GMT
குழந்தைகளுக்கு வெஜிடபிள் என்றால் பிடிக்காது. அவர்களுக்கு காய்கறிகளை இந்த முறையில் சேர்த்து லாலிபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
காலி ஃபிளவர்  50 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பிரெட் தூள் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.
லாலிபாப் ஸ்டிக் - 10



செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்த கொள்ளவும். 

சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போனவுன் [பாட்டி மசாலா] கரம்மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், உப்பு, காலி ஃபிளவர், முட்டைகோஸ் போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மசித்துவைத்துள்ள உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பச்சைமிளகாயை சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதங்கியதும் இறக்கி ஆற விடவும். 

நன்றாக ஆறியவுடன் பிசைந்து சிறிய உருண்டை பிடித்து அதன் நடுவில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைக்கவும். இவ்வறு மாவை அனைத்திலும் செய்யவும். 

சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் லாலிபாப்பை தோய்த்து பிரெட் தூளில் கோட்டிங் கொடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள லாலிபாப்பை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான வெஜிடபிள் லாலிபாப் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News