லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய போண்டா

Published On 2017-12-15 09:44 GMT   |   Update On 2017-12-15 09:44 GMT
வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் 15 நிமிடங்களில் மைதா வெங்காய போண்டா செய்து கொடுத்து விருந்தினர்களை அசத்தலாம்.
தேவையான பொருட்கள் : 

மைதா மாவு - 150 கிராம், 
அரிசி மாவு - 3 டீஸ்பூன், 
வெங்காயம் - 3,
கொத்தமல்லித்தழை- சிறிதளவு, 
கறிவேப்பிலை- சிறிதளவு, 
இஞ்சி - சிறிய துண்டு, 
பச்சை மிளகாய் - 3, 
கடைந்த தயிர் (புளித்தது) - அரை கப், 
சீரகம் - அரை டீஸ்பூன், 
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

சீரகத்தை நன்றாக தட்டிக்கொள்ளவும். 

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை. ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கி வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி, கடைந்த தயிர், சீரகம் போட்டு நன்றாக கலந்து உருட்டி போடும் பதத்தில், கட்டியின்றி நன்கு கலக்கவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய போண்டா ரெடி.

இதை சூடாக சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி மிகவும் குறையும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News