லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான பஞ்சாபி ராஜ்மா

Published On 2017-12-15 06:58 GMT   |   Update On 2017-12-15 06:59 GMT
சப்பாத்தி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி ராஜ்மா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 150 கிராம்
எண்ணெய் - 150 மிலி
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 2 
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டுப்பல்  8  
[பாட்டி மசாலா] மிளகாய்ப் பொடி  2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
[பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் -ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.

குக்கரில் ராஜ்மாவை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்து இறக்கி வைக்கவும். 

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானம் பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும். 

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மல்லித்தூள் (தனியாத்தூள்), [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும். 

அடுத்து இதில் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கவும்.

தக்காளி நன்றாக வெந்தவுடன் இதில் வேக வைத்த ராஜ்மா சேர்த்து நன்றாகக் கிளறவும். அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடம் வரை வேக விடவும். 

கடைசியாக உப்பு, [பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் மீண்டும் வேக விட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான பஞ்சாபி ராஜ்மா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News