search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajma recipes"

    • புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.
    • ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம்.

    ராஜ்மா என்ற மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்த உணவின் பெயரே, அந்த பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது.

    தமிழகத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத பயறு வகை இது. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப்பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் `கிட்னி பீன்ஸ்' எனவும் அழைக்கிறார்கள்..

    வடஇந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்த பயறு வகையும் பிரபலமாகி உள்ளது.

     பெரிதான இந்த பயறு விதையை, நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லை என்றால் வேகாது. இந்த பயறு தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேகவைக்கும்போது இது வெளியேறிவிடும்.

    சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தனியாக சாப்பிடுவதைவிட, மற்ற தானிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.

    ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம். இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது. கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது.

    உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும். இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிக சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும். குடல் பகுதிகளில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, குடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ராஜ்மாவை முளைகட்டிப் பயன்படுத்த முடியாது. சோறு, சப்பாத்தியுடன் சேர்த்தோ அல்லது சூப்பின் சுவை, மணத்தைக் கூட்டவோ பயன்படுகிறது.

    புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், ராஜ்மாவை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடுங்கள். இதை உட்கொள்வதன் மூலம், உடல் உயிரியல் கலவைகளைப் பெறுகிறது. இது புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

    பீன்சில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆற்றல் பற்றாக்குறையை அனுமதிக்காது. இது ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. உங்களை ஆற்றல் நிறைந்ததாக உணர வைக்கிறது. பீன்ஸில் உள்ள புரதம், செல்களை உருவாக்குகிறது. உடலின் வலிமையையும் ஆற்றலையும் பராமரிக்க, கிட்னி பீன்ஸ் சிறந்த தேர்வு. இது உடல் கட்டமைப்பிற்கும் உதவுகிறது.

    இதனுடன், கிட்னி பீன்ஸ் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், ஏனெனில் இதில் ஆக்சிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளது.

    நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பட்டை - 2 துண்டு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மா, பன்னீர் கறியை சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா  - ஒன்றரை கப், 
    பன்னீர் - 150 கிராம்,
    வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
    தக்காளி - 2,
    இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
    மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
    மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

    இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×