லைஃப்ஸ்டைல்

சூப்பரான சுவரொட்டி / மண்ணீரல் ஃபிரை

Published On 2017-12-13 09:46 GMT   |   Update On 2017-12-13 09:47 GMT
மண்ணீரல் என்கிற சுவரொட்டியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சுவரொட்டி / மண்ணீரல் ஃபிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சுவரொட்டி / மண்ணீரல் - 2
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2
[பாட்டி மசாலா] மிளகு தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு, 
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

மண்ணீரல் / சுவரொட்டியை நன்றாக கழுவி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கழுவிய மண்ணீரல் / சுவரொட்டியை குக்கரில் இரண்டு விசிலுக்கு வேகவைத்துக் கொள்ளவும். 

வெந்ததும் சிறிது ஆறின பிறகு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மண்ணீரல் / சுவரொட்டியை போட்டு பத்து நிமிடத்திற்க்கு வறுக்கவும். 

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு, கொத்தமல்லி தழை தூவி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News