லைஃப்ஸ்டைல்
மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இன்று இந்த மலாய் லஸ்ஸியை வீட்டிலேயே செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கப்,
சர்க்கரை - 8 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பால் ஆடை - தேவைக்கு,
பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) - 1/2 கப்,
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிது,
ஏலக்காய் - 2,
அலங்கரிக்க...
தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.
செய்முறை :
கெட்டித் தயிரை, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் நன்றாக கடைய வேண்டும். அதை கடையும்போது நுரைத்து வரும். நடு நடுவில் கெட்டி கிரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும்.
நன்றாக நுரைத்து வரும் போது இதில் ஐஸ்கட்டிகள், குங்குமப்பூவையும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க, பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுங்கள்.
இதன் ருசியும், மணமும் ஒரு தனி ஸ்பெஷல்.
இதில் பாதாம், பிஸ்தா சீவல் சேர்த்து அலங்கரித்தும் கொடுக்கலாம்.
குறிப்பு: பானை இல்லாவிட்டால் மிக்சியில் விட்டு விட்டு அடித்தால் நுரைத்து வரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.