லைஃப்ஸ்டைல்

சூப்பரான மதிய உணவு தக்காளி புலாவ்

Published On 2017-11-23 07:29 GMT   |   Update On 2017-11-23 07:29 GMT
பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவாக இந்த தக்காளி புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 6
கொத்தமல்லித் தழை - 1 கட்டு
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
[பாட்டி மசாலா] தனியா தூள்  - 1 தேக்கரண்டி
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 3



செய்முறை :

பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.

தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது நான்கையும் மிக்சியில் போட்டு நன்றாக விழுது போல அரைத்து கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் இரண்டையும் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து பிரட்டவேண்டும்.

அடுத்து 4 கப் தண்ணீர் விட்டு அப்படியே குக்கரை மூடி 3 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

சுவையான தக்காளி புலாவ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News