லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சூப்பரான கொண்டைக்கடலை குருமா

Published On 2017-11-09 07:39 GMT   |   Update On 2017-11-09 07:39 GMT
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கொண்டைக்கடலை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி
சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
மேத்தி இலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

அரைக்க :

தேங்காய் துருவல் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 5

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2



செய்முறை  :

வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.

பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகப்படுத்தலாம்.

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.

குருமா கெட்டியானதும் கொத்தமல்லித்தழை, மேத்தி இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி.

பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News